ஆடி 1 : தேங்காய் சுட்டு வழிபாடு

கரூரில் ஆடி மாதம் முதல் நாளை வரவேற்கும் விதமாக தேங்காய் சுடும் விழா காவேரி, அமராவதி ஆற்றுக்கரையோரப் பகுதியில் நடைபெற்றது.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடப்பது வழக்கம். கரூரில் ஆடி மாதப் பிறப்பு அன்று அமராவதி ஆற்றுப்படுகையில் தேங்காய் சுடும் வழிபாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நடப்பாண்டில் கரூர் படிக்கட்டு துறை அமராவதி ஆற்றுப்படுகையில் தேங்காய் சுடும் வழிபாட்டில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதற்காக தேங்காய் வாங்கி அதை சுத்தப்படுத்தி தேங்காயில் உள்ள மூன்று கண்ணில் ஒரு கண்ணில் துவாரமிட்டு, தண்ணீரை வெளியேற்றி விட்டு அதன் வழியாக வெல்லம், பச்சரிசி, எள்ளு உள்ளிட்டவற்றை நிரப்பி தேங்காய் மீது மஞ்சள், குங்குமம் பூசி அந்த துவாரத்தில் நீளமான குச்சி கொண்டு சொருகி, பின்னர் தீயிலிட்டு தேங்காயை நன்றாக சுட்டு அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

இந்த வழிபாடு குறித்து கரூரைச் சேர்ந்த சபீனா என்ற பெண் கூறும்போது, ஆண்டுதோறும் நாடு செழிக்கவும், இல்லத்தில் செல்வம் செழிக்கவும் இந்த வழிபாட்டில் ஈடுபட்டு வந்தோம். தற்போது கொரனோ காலம் என்பதால் மக்கள் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியமாக கருதப்படுவதால், கொரனாவிலிருந்து மனித சமுதாயம் மீண்டு சிறப்பாக வாழ வேண்டும் என அம்மனை வேண்டி இந்த தேங்காய் சுடும் வழிபாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil