ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருள்கள் 41 லட்சத்துக்கு ஏலம்

மாதிரி படம்.
கரூர் மாவட்ட எல்லையில் உள்ள சாலைப்புதூரில் செயல்படும் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வேளாண் விளை பொருட்களுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கொடுமுடி மற்றும் கரூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
ஏலத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்துகொண்டு ஏல முறையில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி, இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 58.99 குவிண்டால் எடைகொண்ட 17ஆயிரத்து 889 தேங்காய்கள் வரத்தானது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.30.50ம், குறைந்த விலையாக ரூ. 25.25ம், சராசரி விலையாக ரூ.29.65ம் என்று ரூ. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 405 க்கு விற்பனையானது.
அதேபோல் 255 குவிண்டால் எடைகொண்ட 564 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தானது. இதில் முதல் தரம் கிலோ ஒன்று அதிக விலையாக ரூ.108.70ம், குறைந்த விலையாக ரூ. 103.65ம், சராசரி விலையாக ரூ.107.60ம், இரண்டாம் தரம் கிலோ ஒன்று அதிக விலையாக ரூ.105.27ம், குறைந்த விலையாக ரூ. 86.66ம், சராசரி விலையாக ரூ.100.99ம் என்று ரூ.26 லட்சத்து 55 ஆயிரத்து 832 க்கு விற்பனையானது.
132 குவிண்டால் எடை கொண்ட 243 மூட்டை எள் வரத்தானது. இதில் சிவப்பு ரகம் கிலோ ஒன்று அதிக விலையாக ரூ. 103.01ம், குறைந்த விலையாக ரூ. 71.49ம், சராசரி விலையாகரூ. 96.01ம், என்று ரூ.10 லட்சத்து 91 ஆயிரத்து 970 க்கு விற்பனையானது. 33.20 குவிண்டால் எடைகொண்ட 96 மூட்டை நிலக்கடலை வரத்தானது. இதில் கிலோ ஒன்று அதிக விலையாக ரூ.64.50ம், குறைந்த விலையாக ரூ.61.10ம், சராசரி விலையாக ரூ.64 என விற்பனையானது. மொத்தத்தில் இந்த வாரத்தில் ரூ.41 லட்சத்து 18ஆயிரத்துக்கு வேளாண் விளை பொருள்கள் விற்பனை ஆனது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu