லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதம்

லஞ்ச ஒழிப்பு  போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதம்
X

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சாயப்பட்டறையில் சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் அதிமுகவினர்.

உணவு எடுத்துச் சென்ற போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 22 இட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் உணவு எடுத்துச் சென்ற போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சருக்கு எம்ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சாயப்பட்டற்றை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாயப்பட்டறையில் ஆய்வு மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் வெளியே சென்று உணவு வாங்கி கொண்டு வந்தபோது போலீசாரின. வாகனத்தை தடுத்தி நிறுத்திய அதிமுக நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி உணவு எடுத்து வந்த வாகனத்தை உள்ளே அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story