ஓட்டுப்போடுவதற்கு தேவையான 13 ஆவணங்கள்: கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கரூர் மக்களவை தொகுதிக்கு வரும் 19.04.2024 அன்று தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து பணியாளர்களும் வாக்களிக்கும் விதமாக அரசு அலுவலகங்கள், தனியார் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள். தற்காலிக மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 17.04.2024 மாலை 6 மணிக்குள் அனைத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் தங்கள் தேர்தல் பிராச்சரங்களை முடித்து கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் தொகுதியில் வாக்காளர்கள் அல்லாத வெளிநபர்கள் தொகுதியிலிருந்து வெளியேறி விட வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களை தவிர வெளிநபர்கள் எவரும் தங்க அனுமதி இல்லை.
வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வாக்குச் சாவடி மையத்திற்கு வரும் பொழுது கீழ்க்கண்ட 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆதாரமாக சமர்ப்பித்து வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1) வாக்காளர் அடையாள அட்டை
2) ஆதார் அட்டை
3) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை
4) கணக்குப் புத்தகங்கள் (வங்கி. வழங்கப்பட்டவை) அஞ்சலகங்களால் புகைப்படத்துடன்
5) மருத்துவ காப்பீட்டு அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)
5) ஓட்டுநர் உரிமம்
7) வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை
8) ஸ்மார்ட் கார்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிலாளரால் வழங்கப்பட்டது.
9) இந்திய கடவுச் சீட்டு
10) ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது)
11) மத்திய/மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும்
வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களின்
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை
12) அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது)
13) இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது)
வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வாக்குச் சாவடிக்கு வரும் பொழுது ஏதாவது ஒன்றை ஆதாரமாக சமர்ப்பித்து வாக்கு பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu