அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் திமுக சார்பில் போட்டியிடும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கரூர் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!