தெப்ப உற்சவம்: பக்தர்கள் தரிசனம்

தெப்ப உற்சவம்: பக்தர்கள் தரிசனம்

கரூரில் புகழ்பெற்றதும், தென் திருப்பதி என்றழைக்கப்படும், குடவரை கோவிலான தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் மற்றும் தெப்பத் தேர் திருவிழாவினை கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை உற்சவமாக பல்லக்கு அலங்காரம், மாலை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

9 ம் திருநாளில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 11ம் நாளான இன்று தெப்ப உற்சவத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஸ்ரீதேவி - பூதேவியுடன் எழுந்தருளி தெப்பத்தில் 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story