"வாழும் புரட்சித் தலைவர்" "பாகுபலி-2" -தேர்தல் காட்சிகள்

வாழும் புரட்சித் தலைவர்  பாகுபலி-2   -தேர்தல் காட்சிகள்
X
கரூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழும் பரட்சி தலைவரே என்றும், பாகுபலியாக சித்தரித்தும் பிளக்ஸ் பேனர்கள் வைத்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருந்தார். அப்போது நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.


இதில் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் வைத்திருந்த பேனர்கள் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. ஒரு பிளக்ஸ் பேனரில் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் போன்று தொப்பி அணிவித்தும், கருப்பு கண்ணாடி அணிவித்தும் வாழும் புரட்சி தலைவரே! என அழைத்து வைக்கப்பட்டிருந்தது. அதே போல இவர் வைத்திருந்த மற்றொரு பேனரில் எடப்பாடி பழனிச்சாமியை பாகுபலியாக சித்தரித்து வைக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story