மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்
கரூரில் செவித்திறன், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளிகள் 210 பேருக்கு சிறப்பு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் வாழ.வாதாரம் மற்றும் முன்னேற்றங்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறது. இதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 1மூலமாக செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிறரிடம், ஸ்மார்ட்போன் மூலம் காணொளிக்காட்சி மூலமாக சைகை மொழியில் தொடர்பு கொள்ளவும் அவர்களின் உயர் கல்வி மேம்பாட்டிற்காகவும், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் , தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், சிறப்பு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை 210 நபர்களுக்கு. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துத் துறை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் 2020-21 ஆம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறகாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ .1,500 வழங்கும் திட்டத்தின் கீழ் 2,607 நபர்களுக்கு 4,69,26,000 ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உள்ம்மம99ட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story