Karur News-10 ஆண்டுக்கும் மேலாக சீரமைக்கப்படாத சாலை..! பொதுமக்கள் அவதி..!

Karur News-10 ஆண்டுக்கும் மேலாக சீரமைக்கப்படாத சாலை..! பொதுமக்கள் அவதி..!
X

karur news-சேதமடைந்துள்ள சாலை (கோப்பு படம்)-மாதிரிக்காக 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Karur News

கரூர்:

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக சாலை பராமரிப்பு இன்றி உள்ளதால் அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனால் சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Karur News

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ராயனூர் இடையே ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பகுதிகளாக எம்ஜிஆர் நகர், வெங்கடேஷ்வரா நகர் பகுதிகள் உள்ளன.

இந்த பகுதிகளைச் சுற்றிலும் உள்ள மற்ற சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு அந்த பகுதியில் எளிதான வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பகுதி சாலைகள் மட்டும் கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளதால் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம் சாலையில் மழைநீர் தேங்கிவிடுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

Karur News

மேலும் இதன் காரணமாக வாகனங்கள் இந்த தெரு பகுதியை எளிதில் கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

நடந்து செல்லக்கூட லாயக்கற்ற நிலையில் உள்ள இந்த வெங்கடேஷ்வரா நகர்ப் பகுதி சாலைகளை மக்கள் நலன் கருதி விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள சாலைகளை புதுப்பிக்கத் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Karur News

குறிப்பாக இது கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி. ஆனால் ஒரு மாநகராட்சிப்பகுதி போல இல்லாமல் கண்டுகொள்ளப்பாடாத கிராமத்து சதைகள் போல உள்ளது என்றும் இப்பகுதி மக்கள் குறைகளை கூறி குமுறுகின்றனர்.

ஏற்கனவே, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திலும் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்