மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு
X

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த அஜித்குமார், வீரகுமார்.

குடிநீர் குழாய் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அஜித்குமார், வீரகுமார் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தெற்கு மந்தை தெருவில், நேற்று இரவு குடிநீர் குழாய் பழுது நீக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகிலுள்ள பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் அஜித்குமார் மற்றும் அரவக்குறிச்சி அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீரகுமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இரவு நேரம் என்பதால், அருகிலுள்ள மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு எடுத்து இரும்பு போர்டில் போக்கஸ் லைட் கட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஜேசிபி ஆப்பரேட்டர் அஜித் குமார் போக்கஸ் லைட்டை வேறு இடம் மாற்றுவதற்காக எடுத்த போது மின்சாரம் தாக்கி தடுமாறி வேலை செய்து கொண்டிருந்த குழியில் வீரக்குமார் மீது விழுந்துவிட்டார்.

இதில் இருவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அஜீத்குமார், வீரகுமார் இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story