அதிகப்படியான அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் ம.நீ.ம. வேட்பாளர் கோரிக்கை

அதிகப்படியான அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் ம.நீ.ம. வேட்பாளர் கோரிக்கை
X
கரூரில் வாக்கு எண்ணிக்கையை ஒரு சுற்றுக்கு 10 மேஜைகள் வீதம் அதிகப்படியான அறைகளில் எண்ண வேண்டும் என மக்கள் நீதி மையம் வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் முகமது ஹனீப் சகீல் போட்டியிடுகிறார். இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளித்தார் அதில் கூறியுள்ளதாவது,

கரூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் ஒரு சுற்றுக்கு 14 மேஜைகளில் எண்ணப்படுவது வழக்கம். இப்பொழுது அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு சுற்றுக்கு 10 மேஜைகள் வீதம் அதிகப்படியான அறைகளில் வாக்குகளை எண்ண வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரம்ஜான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் பலர் நோன்பை கடைபிடிப்பதால் சற்று காற்றோட்டமான அறைகளில். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நடத்தவேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!