காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
X

தோகை கலாம் நற்பணி மன்றத்தின் சார்பில் காவலர்கள் கெளரவிக்கப்படுகின்றனர்.

வேலாயுதம்பாளைம் போலீசாருக்கு தோகை கலாம் நற்பணி மன்றம் சார்பில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம், புஞ்சை புகழூர் தாலுகா, தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள தோகை கலாம் நற்பணி மன்றத்தின் சார்பாக கடந்த 6 மாத காலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

சுடுகாடு செல்லும் பாதையை சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், மேலும் கொரோனா பெரும்தொற்று காலகட்டத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் என பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இதனையடுத்து இன்று வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், காவல் ஆய்வாளர் என 35 பேர்களுக்கு, கிருமிநாசினி, கையுறை, முகக்கவசம் மற்றும் பொன்னாடைகள் போற்றி காவலர்களை சிறப்பித்தனர்.

இந்த நிழ்ச்சியில், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரபாரதி, தோகை கலாம் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!