கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதி சந்தைகளில் முருங்கைக்காய் விலை உயர்வு..!
அரவக்குறிச்சி பகுதியில் சாகுபடி செய்யப்படும் முருங்கை.(கோப்பு படம்)
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சந்தை முருங்கைக்காய் மற்றும் நாட்டு காய்கறிகளுக்கு முக்கிய சந்தையாக விளங்கிவருகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி சந்தைக்கு வரத்து குறைவால் முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈசநத்தம், ஆத்துமேடு, கொத்தப்பாளையம், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர், தடாகோவில், முத்துக்கவுண்டன்பாளையம், சின்னாக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் முருங்கைக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை முருங்கைக்காய் சீசன் ஆகும். இந்த சமயத்தில் முருங்கைக்காய் அதிகளவில் காய்க்கும். தற்போது டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் முருங்கை சீசன் குறைந்து காய்கள் வரத்து குறைவாக உள்ளது.
கிலோ ரூ.60-க்கு விற்பனை
இதனால் அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், இந்திரா நகர், ஆத்துமேடு, ஈசநத்தம், பள்ளப்பட்டி பிரிவு உள்ளிட்ட பகுதியிலுள்ள முருங்கைக்காய் மார்க்கெட்டில் வியாபாரிகள் முருங்கைக்காயை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது வரத்து குறைவாக உள்ளதால் முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி பகுதி வறட்சியான பகுதி என்றாலும் கூட கிணற்றுப்பாசனம் மூலமாக விவசாய சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரவக்குறிச்சி, ஈசநத்தம், ஆத்துமேடு, கொத்தப்பாளையம், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர், தடாகோவில், முத்துக்கவுண்டன்பாளையம், சின்னாக்கவுண்டனூர் போன்ற பகுதிகளில் நாட்டுக்காய்கறிகளான பாகல், சுரைக்காய், வெண்டை, பூசணி, பீர்க்கை, தக்காளி, புடலை, அவரைக்காய், முருங்கை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதி விவசாயிகள் விவசாய சாகுபடியுடன் ஆடு, மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பசு வளர்ப்பில் ஈடுபட்டு பால் உற்பத்தியும் செய்து வருகின்றனர். இப்பகுதியில் முருங்கை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது முருங்கை சீசன் முடியும் தருணம் என்பதால் வரத்து குறைந்து விலை அதிகமாகிவிட்டது. அதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu