கரூர்: தங்கமணியின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கரூர்: தங்கமணியின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
X

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வசந்தா வீடு.

வேலாயுதம்பாளையத்தில் தங்கமணியின் உறவினர் வசந்தா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக மின் துறையின் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் வசந்தா, இவர் தங்கமணியின் உறவினர் எனக் கூறப்படுகிறது. இவரது வீட்டில் இன்று காலையில் கரூர் மற்றும் நாமக்கல் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

வசந்தாவின் சகோதரர் வேலுச்சாமி சிங்கப்பூரில் உள்ளார். சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். முன்னாள் அமைச்சர் தங்கமணி வேலுச்சாமி மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. வசந்த மகள் மற்றும் மகன் ஆகியோர் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா