தொண்டர்களை அடித்தால் பொறுக்க முடியாது அண்ணாமலை கொந்தளிப்பு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தொண்டர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
தி.மு.க.வினர் தாக்கியதாக கூறி, அ.தி.மு.க.,பா.ஜ.க தொண்டர்கள் கரூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, ' கரூர், அரவக்குறிச்சி தொகுதியில், அ.தி.மு.க., பா.ஜ.க தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. செந்தில் பாலாஜி தேர்தலை அராஜக அரசியலாக மாற்றி விட்டார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரத்தில், தி.மு.கவினர் அ.தி.மு.கவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அது கண்டிக்கத்தக்கது. போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தோல்வி பயத்தில் தி.மு.க., வினர் எதையும் செய்வார்கள். செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது, ஆணவத்தின் வெளிப்பாடு. அது அழிவைத்தான் தேடித்தரும். இந்த தேர்தல் தான் செந்தில் பாலாஜிக்கு, கடைசி தேர்தலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் தொண்டர்களை ஒரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது. தேர்தல் கமிஷனில் புகாரும் செய்யப்பட்டுள்ளது.' இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu