'கண்காணிப்பை அதிகமாக்குங்க' : எம்எல்ஏ செந்தில்பாலாஜி

கண்காணிப்பை அதிகமாக்குங்க  :  எம்எல்ஏ செந்தில்பாலாஜி
X

கரூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்களை எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். 

வாக்கு என்னும் மையங்களில் கூடுதல் கண்காணிப்பு தேவை என்று எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார்.

கரூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை சுற்றி கேமராக்களின் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும், கண்காணிப்பு கேமராக்களை கூடுதலாக வைக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கையை 14 மேஜைகளுக்கு பதிலாக 28 மேஜைகளில் எண்ண வேண்டுமென கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கோரினார்.

கரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட 4 தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கரூர் அருகில் தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு பணியை 24 மணி நேர கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளது. கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் நேற்று இரவு நேற்று இரவு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு அருகில் உள்ள கட்டி டத்தில் கம்யூட்டர்கள், இணைய தளம், வைபை உள்ளிட்டவை இயங்கியது. இதுகுறித்து , அங்கு இருந்த திமுக முகவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் கரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆட்சியர் மற்றும் திமுகவினர் முன்னணியில், திமுகவினர் புகார் கூறிய கட்டிடத்தின் அறைகளை திறந்து பார்த்தனர்.

மாணவர்களின் கம்ப்யூட்டர் லேப்பான அந்த அறையில் ஒரு கம்ப்யூட்டர் மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள் சிலர் கம்ப்யூட்டர் லேப்பை பயன்படுத்தியதாகவும் அவர்கள் கம்ப்யூட்டரை அணைக்காமல் சென்றுவிட்டதாகவும் விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து இன்று கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அந்தப் பகுதியில் இணையதள தொடர்புகளை நெறிப்படுத்த வேண்டும். வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தை சுற்றி கணினி உள்ளிட்ட உபகரணங்களை தடை செய்ய வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும்.

கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்கு எண்ணிக்கை 14 மேஜைகளில் நடைபெறுவதை 28 மேஜைகளாக அதிகப்படுத்தி எண்ண வேண்டும். கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு அதிக முகவர்கள் கூடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!