கரூர் கிராமசபை கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை

கரூர் கிராமசபை கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை
X
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 3ஆம் தேதி கரூரில் நடைபெறும் மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என எம்எல்ஏ செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 3ஆம் தேதி கரூரில் நடைபெறும் மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என எம்எல்ஏ செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறினார்.

கரூரில் திமுக மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 3ஆம் தேதி கரூரில் நடைபெற உள்ள மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் ஈரோட்டில் இருந்து 3 ம் தேதி காலை 11 மணிக்கு கரூர் வருகிறார் அன்று மாலை 4 மணிக்கு வாங்கல் குப்பிச்சிபாளையம் கிராமத்தில் நடைபெறும் மக்கள் கிராமசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். கரூர் வரும். மு.க. ஸ்டாலினுக்கு 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் திருச்சி செல்கிறார் என்று எம்எல்ஏ செந்தில் பாலாஜி கூறினார்.

Tags

Next Story