சென்னையில் கருணாநிதி சிலை: துணை ஜனாதிபதி இன்று திறந்து வைக்கிறார்

சென்னையில் கருணாநிதி சிலை: துணை ஜனாதிபதி இன்று திறந்து வைக்கிறார்
X

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ள இடம். 

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று மாலை திறந்து வைக்கிறார்.

திமுக முன்னாள் தலைவரும், 5 முறை தமிழக முதலமைச்சராக இருந்தவரும், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதியின் பிறந்தநாள், ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனிடையே, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழுஉருவச்சிலை நிறுவும்பணி நடைபெற்றது. அதன்படி 1.70 கோடி ரூபாய் மதிப்பில், 16 அடி உயரத்தில் கருணாநிதியின் வெண்கலச் சிலை, 12 அடி உயர பீடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

ஓமந்தூரார் தோட்டத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய நாயுடு, கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து கலைவாணர் அரங்கில், விழா நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story
கீழ்பவானியில் நெல் அறுவடை கோலாகலம்..! இன்று முதல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டுக்கு தயாராகின்றன..!