லாரி ஒப்பந்தத்தில் முறைகேடு, பல லட்சம் ரூபாய் மோசடி, சங்க தலைவர் மீது குற்றச்சாட்டு

லாரி ஒப்பந்தத்தில் முறைகேடு, பல லட்சம் ரூபாய் மோசடி, சங்க தலைவர் மீது குற்றச்சாட்டு
X

பைல் படம்

லாரி ஒப்பந்தத்தில் முறைகேடு, பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக சங்க தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பம்மத்தில் கல்குளம் விளவங்கோடு தாலுக்கா விளைபொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டுவருகிறது. அதன் வாளாகத்திலேயே அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குடோனும் செயல்பட்டு வருகிறது.

அரசுக்கு சொந்தமான இந்த சங்கத்தின் கட்டுபாட்டிலுள்ள நியாயவிலைகடைகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளுக்கான ஒப்பந்தம் வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று லாரிகளுக்கான ஒப்பந்தம் நடைபெறுவதாக அறிவிக்கபட்ட நிலையில் திடீரென ஒம்பந்தம் மாற்றிவைப்பதாக அலுவலக வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

இதனிடையே ஒப்பந்த விதிமுறைகளை வெளியே விடாமல் முறைகேடாக ஒப்பந்தம் நடைபெறுவதாகவும், ஒப்பந்தம் ஒதுக்கி தருவதாக கூட்டுறவு துறை இணை ஆணையர் மற்றும் சங்க தலைவரும் முன்னாள் அதிமுக நிர்வாகியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தவருமான நாஞ்சில் டொமினிக் ஆகியோர் லட்சகணக்கில் பணம் வாங்கி முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் கூறி லாரி உயிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் இது குறித்து விசாரடை மேற்கொண்டனர், முறைகேடு மற்றும் பண மோசடி குறித்து சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!