கனமழையால் குமரி திற்பரப்பு அருவியில் 2வது நாளாக காட்டாற்று வெள்ளம்

கனமழையால் குமரி திற்பரப்பு அருவியில் 2வது நாளாக காட்டாற்று வெள்ளம்
X

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில், வெள்ளம் கொட்டுகிறது.  

குமரியின் குற்றாலம் எனப்படும், திற்பரப்பு அருவியில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு பெருமளவில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி நீரும் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. கோதையாறு, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இரண்டு அணைகளில் இருந்தும் 23 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில், வெள்ளப்பெருக்கு காட்டாற்று வெள்ளமாக மாறி உள்ளது. அருவியில் இருந்து வெளியேறும் நீர் ஓடு பாதையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business