காலை 8 மணிமுதல் இரவு 7 மணி வரை நியாயவிலை கடை செயல்படும் என அறிவிப்பு

காலை 8 மணிமுதல் இரவு 7 மணி வரை நியாயவிலை கடை செயல்படும் என அறிவிப்பு
X

மாவட்ட ஆட்சியர்

தீபாவளியை முன்னிட்டு, நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல், இரவு 7 மணி வரை செயல்படும் என குமரி ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று நாட்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும், காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்படும்.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள அறிவிக்கையில் கூடுதல் நேரம் செயல்படும் நியாயவிலை கடை மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்காதவர்கள், வழக்கம் போல பண்டிகை காலம் முடிந்து நவம்பர் 8 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

பெருந்தொற்று காலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள தடுப்பு விதிகளைப் பின்பற்றி, அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!