வீட்டில் தனிமையில் இருந்த முதியவரை தாக்கிய வழக்கறிஞரை தேடும் போலீஸார்

வீட்டில் தனிமையில் இருந்த முதியவரை தாக்கிய  வழக்கறிஞரை தேடும் போலீஸார்
X

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன்

குமரியில் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய வழக்கறிஞரை போலீஸார் தேடுகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன்( 75 ). இவர் இயற்கை ஆர்வலராக உள்ளார்.

இதன் காரணமாக தான் தங்கி இருக்கும் வீட்டின் மேல் மாடியில் பறவைகள் மற்றும் அரியவகை செடிகள் வளர்த்து பராமரித்து வருகிறார்.இவருக்கு ஒரு மகன் உள்ளார், அவர் அந்த பகுதியில் அலுமினிய பேபிரிகேட்டர் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 5 ம் தேதி மதுசூதனன் வீட்டின் மேல் மாடியில் தான் வளர்த்து வரும் செடிகொடிகளுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்த போது அவரது வீட்டினுள் அத்துமீறி நுழைந்த அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான கஜேஷ் என்பவர் காரணம் ஏதும் கூறாமல் முதியவரை சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதில் முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது, அப்போது அவர் சப்தம் போடவே தகவல் அறிந்து அருமனை போலீஸார் அங்கு வந்துள்ளனர்..அப்போது அங்கு நின்றிருந்த கஜேஷ், போலீஸார் விசாரித்தால் கீழே விழுந்து காயம் பட்டதாக கூறவேண்டும். இல்லையெனில் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விடுவேன் என மிரட்டினாராம். உயிருக்கு பயந்த முதியவர் மதுசூதனன், தன்னை விசாரித்த போலீஸாரிடம் அதுபோல் கூறி உள்ளார், இதனையடுத்து போலீஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

இதனிடையே மீண்டும் முதியவரை தாக்கிய கஜேஷ் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து நைஸாக வெளியேறி சென்றுள்ளார்.இதனையடுத்து அவரது உறவினர்கள் படுகாயங்களுடன் கிடந்த முதியவரை மீட்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக மதுசூதனன் அருமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அருமனை போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் கஜேஷை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!