மீன்பிடி துறைமுகத்தில் மர்ம டீசல் டேங்கர் லாரி: போலீசார் விசாரணை.

மீன்பிடி துறைமுகத்தில் மர்ம டீசல் டேங்கர் லாரி: போலீசார் விசாரணை.
X

பறிமுதல் செய்யப்பட்ட டீசல் லாரி

குமரி மீன்பிடி துறைமுகத்தில் மர்ம டீசல் டேங்கர் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் 8000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டீசல் டேங்கர் லாரி சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்துள்ளது. இதனை கவனித்த புதுக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக இந்த டேங்கர் லாரி முறையான அனுமதி ஏதும் பெறாமல் துறைமுத்திற்குள் வந்து அங்கிருந்து கடலுக்கு தொழிலுக்கு செல்லும் விசைபடகுகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக டீசல் விற்பனை செய்ய வந்திருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து புதுக்கடை போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்து லாரியை சிறைபிடித்து வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai agricultural applications