தமிழக கேரளா எல்லையில் 230 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

தமிழக கேரளா எல்லையில் 230 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது
X
குமரியில் தமிழக கேரளா எல்லை பகுதியில் 230 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டு உள்ளார்.மேலும் தீவிரமாக கண்காணிக்கவும் போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில் இன்று பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் கன்னுமாமூடு சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு கடையில் குட்கா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் அங்கு செந்து கடையை சோதனை செய்தார். அப்போது ஓடல்விளை பகுதியை சேர்ந்த கோபாலன்(57) என்பவர் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவரை பிடித்து தீவிர விசாரணை செய்ததோடு அந்த இடத்தை சோதனை செய்த போது அவர் சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 230 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story