கள்ளக் காதலனை கரம் பிடிக்க குழந்தைகளை கொலை செய்ய துணிந்த தாய்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்( 34 ) கொத்தனாராக வேலை பார்க்கும் இவரது மனைவி கார்த்திகா( 21). இவர்களுக்கு மூன்றரை வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கம் அடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை எடுத்து கொண்டு மார்த்தாண்டம் பகுதியிள் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார், இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரவு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஷப்பொடியை குழந்தையே சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும் குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் கூறி தாய் தந்தையை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கார்த்திகாவின் செல்போன்னிற்கு வந்த சென்ற அழைப்புகள் அழிக்கபட்டிருந்ததை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நடத்திய விசாரணையில் அந்த செல்போனிற்கு பல ஆண்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதில் மாரயபுரம் பகுதியை சேர்ந்தவரும் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் அதிகநேரம் பேசியிருப்பதும் இந்த சம்பவம் நடந்த நேரத்தில் பலமுறை அவரிடம் பேசியதும் தெரிய வந்தது. தொடர்ந்து சுனிலை காவல் கஸ்டடியில் எடுத்து விசாரித்ததில் அவர் கார்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியாமல் பழகியதாகவும், அந்த தகவல் தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கார்த்திகா அளித்த வாக்குமூலத்தில் கள்ள காதலில் மூழ்கி இரண்டு குழந்தைகளை கொன்றால் அவன் ஏற்றுகொள்வான் என நினைத்து சந்தேகம் வராமல் இருக்க சில நாட்களாக வீட்டில் எலி தொல்லை இருப்பதாக கூறி வீட்டை சுற்றி பாலிடா பொடியை தூவி வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அதனை செய்யும் போது ஊர்மக்கள் பார்வைக்கு பார்கும்படி நடந்து கொண்டதாகவும் பின்னர் சம்பவத்தன்று குழந்தைகள் விரும்பி உண்ணும் சேமியா உப்பு மாவில் கலந்து கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் மூத்த குழந்தை குறைவாக உப்புமா சாப்பிட்டதால் தப்பித்து கொண்டது, அந்த விசயம் தாமதமாக தெரிய வந்த நிலையில் தற்போது குழந்தைக்கு திருவனந்தபுரம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனிடையே கார்த்திகாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் முயற்சி நடந்து வருகிறது, மேலும் உயிரிழந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய தேவையான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu