தடைசெய்யப்பட்ட 215 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல் - 2 பேர் கைது

தடைசெய்யப்பட்ட 215 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல் - 2 பேர் கைது
X
குமரியில் தடைசெய்யப்பட்ட 215 கிலோ குட்கா, புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டு உள்ளார். மேலும் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டதோடு ரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமாருக்கு கண்ணுமாமூடு பகுதியில் குட்கா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் அங்கு சென்ற போலீசார் அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பாபு சுதிஷ் (33) மற்றும் வினு (49) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை தீவிர விசாரணை செய்து, அந்த இடத்தை சோதனை செய்த போது அவர்கள் சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை, மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 215 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
why is ai important to the future