கனிமவளங்கள் கடத்த முயற்ச்சி - 2 டொம்போக்கள் பறிமுதல் ஒருவர்கைது

கனிமவளங்கள் கடத்த முயற்ச்சி - 2 டொம்போக்கள் பறிமுதல் ஒருவர்கைது
X
கனிமவளங்கள் கடத்த முயற்ச்சி 2 டொம்போக்களை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருத்து தமிழக கேரளா எல்லை வழியாக கேரளாவிற்கு அவ்வபோது அனுமதியின்றி பாறைகள், எம்சான்ட், ஆற்றுமணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தபட்டுவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்,

இதனையடுத்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் தமிழக கேரளா எல்லை சோதனை சாவடிகளில் சோதனைகள் கடுமையாக்கபட்டது. மேலும் ரோந்து பணிகளையும் போலீசார் தீவிரபடுத்தியதையடுத்து கனிமவளக்கடத்தல் சற்று குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் அருமனை வழியாக கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தபடுவதாக வந்த தகவலிலன் அடிப்படையில் அருமனை காவல் ஆய்வாளர் ஞானராஜ் அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் திலீபன் தலைமையிலான காவல்துறையினர் அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது அருமனை சந்திப்பில் வந்த ஒரு டெம்போவை சோதனை செய்ததலில் அதில் அனுமதியின்றி கேரளாவிற்கு எம்சான்ட் மணலை கடத்துவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் வாகனத்தை ஓட்டிவந்த மூவோட்டுகோணத்தை சேர்ந்த 28 வயதான ஜாண் நிக்கோலஸ் என்பவரை கைது செய்து வழக்குபதிவு செய்தனர்.

இதேபோல் அருமனையை அடுத்த வெள்ளாங்கோடு பகுதியில் உதவி ஆம்வாளர் திலீபன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நள்ளிரவில் அப்பகுதி வழியாக வந்த டெம்போ வாகனத்தை சோதனை செய்ததலில் 45 மூட்டைகளில் ஆற்றுமணல் கடத்துவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர், அந்த வாகனத்தின் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் அவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story