போலீஸ் அதிகாரியின் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

போலீஸ் அதிகாரியின் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
X

கன்னியாகுமரி அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு வாகனங்களான கார், டூவீலரை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி எரித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் நிறுத்தி இருந்த போலீஸ் அதிகாரியின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் கார், டூவீலர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

களியக்கவிளை புத்தன் சந்தை இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் செலின் குமார், களியக்கவிளை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார்.

நேற்று காவல் நிலைய வேலை முடிந்து இரவு 9 மணியளவில் வீடட்டிற்க்கு வந்த செலின் குமார் வழக்கம் போல் இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்துடன் தூங்கிவிட்டார்.

விடியர் காலை 4 மணியளவில் விட்டின் வெளியில் வெடி சத்தம் கேட்ட நிலையில் செலின் குமார் வெளியே வந்து பார்த்தபோது தன்னுடைய கார் பைக் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் தீயை அணைப்பதர்க்கு முயர்ச்சி செயதும் முடியவில்லை. முற்றுலுமாக காரும் பைக்கும் தீ பற்றி எரிந்தது.

பிறகு அவர் இது குறித்து அருமனை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்போது 2 மர்ம நபர்கள் காரையும் பைக்கையம் பெட்ரோல் குண்டு போட்டு தீ வைப்பது தெரியவந்தது.

Tags

Next Story