ஓமிக்ரான் வைரஸ் எதிராெலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை

ஓமிக்ரான் வைரஸ் எதிராெலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை
X

களியக்காவிளை சாேதனை சாவடி.

ஓமிக்கிரான் அச்சம் ஏற்பட்டு உள்ள நிலையில் குமரியில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை.

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது ஓமிக்ரான் பாதிப்பும், பறவை காய்ச்சலும் கேரளா மாநிலத்தை மிரட்டி வருகிறது.

அதன்படி கேரளாவில் தற்போது 60 க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க நோய் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கேரளாவிற்கு பேருந்து போக்குவரத்தை தொடங்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு தமிழக கேரளா எல்லை சோதனை சாவடிகளில் சோதனையை நிறுத்தியது.

இதனிடையே கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இதனிடையே தமிழக கேரளா எல்லையான களியக்காவிளை உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளிலும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சுகாதார துறை, காவல்துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து 24 மணி நேர சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.

குறைந்த பட்சம் வெப்பமானி கொண்டு சோதனை செய்து சந்தேகம் இருக்கும் நபர்களுக்கு சளிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் அது போன்று செய்தால் மட்டுமே கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவலை தடுக்க முடியும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!