கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை முதல் வேட்பு மனுதாக்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை முதல் வேட்பு மனுதாக்கல்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பைல் படம்)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை முதல் வேட்பு மனுதாக்கல் செய்ய ஏற்பாடுகள் தீவிரம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியானது மாநில தேர்தல் ஆணையதால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்கி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் நாளை முதல் வேட்பு மனுதாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடங்களில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!