குமரி: ஓடைக்குள் கவிழ்ந்தது கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்

குமரி: ஓடைக்குள் கவிழ்ந்தது கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்
X
குமரியில், மண்சரிவால் மழைநீர் ஓடைக்குள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு அருகே குன்னத்தூரில் இருந்து சாத்திரவிளை செல்லும் சாலையின் ஓரம், உடைப்பு ஏற்பட்டு சாலை வீதி குறைவாக காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த சாலை வழியாக காப்புகாடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபர் தனது சகோதரியின் வீட்டுக்கு செல்ல வேண்டி தனக்கு சொந்தமான காரில் வந்துள்ளார்.

அப்போது அகலம் குறைவாக இருந்த சாலை வழியாக செல்ல முயன்ற போது மண் சரிவு ஏற்பட்டு, மழைநீர் ஓடைக்குள், கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இதில் வாகனம் முழுவதும் சேதமடைந்த நிலையில், காரில் இருந்த ஆகாஷ் காயங்கள் ஏதும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலை துண்டிக்கப்பட்டு சீரமைக்கபடாமல் கிடப்பதே விபத்திற்கு காரணம் என ஊர்மக்கள் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!