மழை நீர் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு - போராட்டத்தை தடுத்து பணியை தொடங்கிய பேரூராட்சி.

மழை நீர் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு - போராட்டத்தை தடுத்து பணியை தொடங்கிய பேரூராட்சி.
X
மழை நீர் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் போராட்டத்தை தடுத்து பணியை தொடங்கிய பேரூராட்சி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட டவ் தே புயல் மற்றும் யாஷ் புயல் காரணமாக பெய்து வந்த தொடர் மழையால் எழுதேசம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்தன.

இந்நிலையில் மழை நின்று இரண்டு வாரத்திற்கு மேலாகியும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் துர்நாற்றம் வீசியும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டும் காணப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து மழைநீர் ஓடைகளில் ஏற்பட்டு இருக்கும் அடைப்புகளை நீக்கி, ஆக்ரமிப்புகளை அகற்ற கூறி ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் போராட்டத்திற்கும் தயார் ஆகினர், இந்நிலையில் கிள்ளியூர் தாசில்தார் ஜூலியன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு இரண்டு ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு