குமரிக்கு கூடுதலாக 2000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி

குமரிக்கு கூடுதலாக 2000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை அடுத்து தடுப்பூசி போட முன்வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் தடுப்பூசி தேவையான அளவு சப்ளை இன்மையால் குமரி மாவட்டத்தில் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட முடியாமல் திரும்பி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து 2000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்து குமரி மாவட்டம் கொண்டு வரப்பட்டு மருத்துவமனை வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!