அதிகரிக்கும் கொரோனா: மலையோர பகுதிகளில் சேவை செய்யும் சேவா பாரதி

அதிகரிக்கும் கொரோனா: மலையோர பகுதிகளில் சேவை செய்யும் சேவா பாரதி
X
மலையோர பகுதிகளில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் மக்களுக்கு உதவ இலவச ஆம்புலன்ஸ் சேவையை சேவா பாரதி தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்ட மேற்க்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களான பேச்சிபாறை , குற்றியாறு, கோதையாறு போன்ற ஆதிவாசி பழங்குடியின மலையோர கிராமங்களில் நாளுக்கு நாள் கொரானா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நேற்றுவரை மலையோர பகுதியில் 74 ஆதிவாசி மக்கள் கொரோனாவால் பாதிக்கபட்டு உள்ளனர், இந்த பகுதிகளில் வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்யவும் முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் ஆதிவாசி மக்களுக்கு உதவும் வகையில் அருமனை மண்டல சேவா பாரதி அமைப்பு சார்பில் கொரோனா நோயால் இறந்தவர்கள் உடல்களை எடுத்து செல்லவும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரவும் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்த முற்றிலும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தக்கலை சரக டி.எஸ்.பி ராமசந்திரன் தொடங்கி வைத்தார், அதன்படி இந்த ஆம்புலன்ஸ் ஆதிவாசி கிராம பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு சேவை மேற்கொள்ளப்பட உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!