கிழக்கு கடல் பகுதிகளில் மீன் பிடிக்க தடை - கலெக்டர் அறிவிப்பு

கிழக்கு கடல் பகுதிகளில்  மீன் பிடிக்க தடை - கலெக்டர் அறிவிப்பு
X

கிழக்கு கடல் பகுதிகளில் இன்று முதல் மீன் பிடிக்க தடை விதித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் இன்று ( ஏப்ரல் 15)ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு இழுவலை விசைப்படகு மற்றும் தூண்டில் வழி வலை விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலும் மீனவர்கள் இழுவலை விசைப்படகுகள் அல்லது தூண்டில்வளைவு வழி வலை விசைப்படகினை பயன்படுத்தி மீன் பிடிப்பது 61 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு ரத்து செய்யப்படும், மண்ணெண்ணெய் மானியம் நிறுத்தம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil