வழக்கு நிலுவையால் பாழடைந்த வீட்டில் பீதியுடன் வசிக்கும் குடும்பம்!

வழக்கு நிலுவையால் பாழடைந்த வீட்டில் பீதியுடன் வசிக்கும் குடும்பம்!
X

வீட்டை சீரமைக்க முடியாத .ஏக்கத்தில் முருகன்.

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் வீட்டை சீரமைக்க முடியாமல் ஏழை குடும்பம் மழை, வெயிலில் தவித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மேலதெரு பிள்ளையார்விளை பகுதியை சேர்ந்தவர் முருகன் (65) கூலி தொழிலாளியான இவர் தனது மகன் குடும்பத்தினருடன் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவர் முருகன் வாழ்ந்து வரும் வீடு மற்றும் அதோடு சேர்ந்து உள்ள 5 சென்ட் நிலம் தனக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாக கூறப்படுகிறது.

இதனால் சுமார் நாற்பது வருடங்களாக அந்த வீட்டை பழுது பார்க்க முடியாமல் கூரைகள் பெயர்ந்து விழுந்த நிலையில் காணப்படும் நிலையில் முருகன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது அப்பகுதியில் மழை பெய்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் அந்த கட்டிடம் இடித்து விழும் அபாயத்தில் உள்ளது.

இதனால் வீட்டில் உயிரை கையில் பிடித்து கொண்டு நான்கு பேரும் வசித்து வருகின்றனர். அவர்களின் இந்த நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றமும், அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்