குமரியில் கொரோனா சிகிச்சை 1141 ஆக உயர்ந்தது

குமரியில் கொரோனா சிகிச்சை 1141 ஆக உயர்ந்தது
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 224 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது, தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1141 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 351 நபர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 632 நபர்கள் கோவிட் கேர் சென்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 158 நபர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளனர்,

இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19411 ஆக உள்ள நிலையில் இவர்களில் 17702 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசி மருந்து 80504 நபர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து 14260 நபர்களுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.

முக கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட காரணங்களுக்காக இதுவரை 40001 நபர்களிடம் இருந்து ரூபாய் 7623426 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து நோயற்ற நிலையை உருவாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!