குமரி போலீசார் பாதுகாப்புடன் வடிகால் நீர் ஓடை அமைக்கும் பணி தொடக்கம்

குமரி போலீசார் பாதுகாப்புடன் வடிகால் நீர் ஓடை அமைக்கும் பணி தொடக்கம்
X

பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவ குருபிரபாகரன் தலைமையில்  குழு, சர்வே துறையினரின் மூலம் அளவீடு செய்து, ஆய்வு மேற்கொண்டது.

குமரியில், மக்களின் கோரிக்கையை ஏற்று போலீசார் பாதுகாப்புடன் வடிகால் நீர் ஓடை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பாலாமடம், பள்ளித் தோட்டம், ஏலாக்கரை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து, குடியிருப்புகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கின. தண்ணீரை அகற்ற முறையான வடிகால் நீர் ஓடைகள் அமைத்து தர அந்த பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இது சம்பந்தமாக பல கட்ட போரட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவ குருபிரபாகரன் தலைமையிலான குழு, நேற்றைய தினம், பாதிக்கபட்ட இடத்தை சர்வே துறையினரின் மூலம் அளவீடு செய்து தண்ணீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆய்வு செய்து சென்றனர்.

அதன்படி, பாலாமடம் பகுதியில் இருந்து ஏலாகரைக்கு செல்லும் பகுதியில் உள்ள ஒரு வழிப்பாதையை உடைத்து, அந்த பகுதியில் வடிகால் ஓடை அமைத்து கீழே தண்ணீர் இடைஞ்சல் இல்லாமல் வழிந்தோடவும் ஓடையின் மேலே காங்கிரீட் ஸ்லாப்புகள் அமைத்து , பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தும் நடைபாதையும் ஏற்படுத்தி கொடுக்க தீர்மானித்து சென்றனர்.

இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று காலை பாலமடம் பகுதிக்கு வந்த சார் ஆட்சியர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தீர்மானிக்கப்பட்ட இடத்தில் பணியாட்களை கொண்டு ஓடை தோண்டும் பணியை துவக்கி வைத்து உடனிருந்து பணியை துரிதபடுத்தினார். இதனால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!