பல நூறு குடும்பங்களை வாழ வைத்த கட்டிடம் - பராமரிப்பின்றி பாழ்

பல நூறு குடும்பங்களை வாழ வைத்த கட்டிடம் - பராமரிப்பின்றி பாழ்
X

ஒரு காலத்தில், முன்னூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களை காப்பாற்றிய நித்திரவிளையில் உள்ள இந்த செக்கு எண்ணெய் ஆலை, இன்று பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது. 

குமரியில், 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை வாழ வைத்த கட்டிடம், இன்று பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இராமவர்மன்புதுத்தெரு பகுதியில், சுமார் 300 க்கும் மேற்பட்ட செக்காளர் சமுதாய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குலத் தொழிலான, செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழிலை மேம்படுத்தும் வகையில், சமுதாய மக்களுக்கு சொந்தமான 10 சென்ட் இடத்தில், 1969 ம் ம் ஆண்டு செக்காட்டும் ஆலை கட்டப்பட்டது.

இதை, அப்போதைய பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன், திறந்து வைத்தார். அன்று முதல், 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை வாழ வைத்த நாட்டு செக்கு எண்ணெய் ஆட்டும் ஆலை, காலப்போக்கில் தொழில் நலிவடைந்து, கூட்டுறவு சங்கம் கலைக்கபட்டது. இதனால், இந்த ஆலை மூடப்பட்டு, பல வருடங்களாக எந்த வித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.

இந்த அலுவலக கட்டிடத்தின் மேற்கூரைகள் சிதிலமடைந்தும் கட்டிடத்தில் இடம்பெற்றிருந்த கதவுகள் ஜன்னல்கள் உடைக்கப்பட்டும் கிடக்கின்றன. மேலும் இந்த கட்டிடத்தின் உள்ளேயும் மேல்பகுதியிலும் மரங்கள் வளர்ந்து கட்டிடம் இடியும் நிலையிலும் காணப்பட்டு வருகிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி கிடக்கிறது.

எனவே, கட்டிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சமூக நலக்கூடமோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையமோ அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!