தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு.

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு.
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்  சான்றிதழ் வழங்குகிறார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக சட்டசபை 2021 பொது தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைதேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் எந்த வித வன்முறையும் இன்றி அமைதியாக நடைபெற்றது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதீத முயற்சியால் தேர்தல் பணியில் முன்னாள் ராணுவத்தினர், மற்றும் காவல் அதிகாரிகள் அதிகம் பேர் பயன்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தேர்தல் சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற தங்களது சிறந்த பங்களிப்பை ஆற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாக பாராட்டி, சான்றிதழ் வழங்கி, தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற ஊக்கப்படுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!