பணி மாறுத்தலால் ஆத்திரம் - அறையை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரி

பணி மாறுத்தலால் ஆத்திரம் - அறையை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரி
X

களியல் வனச்சரக அலுவலகம்

குமரியில், வனத்துறை பணி மாறுத்தலால் ஆத்திரம் அடைந்து, அறையை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், களியல் வனச்சரக அலுவலகத்தில் வனச்சரக அதிகாரியாக பணியாற்றியவர் கணேசன். இந்நிலையில் கணேசனுக்கு வேறு இடத்தில் பணியாற்ற பணி இட மாறுத்தல் ஆணை வழங்கப்பட்டது.

தன்னை பணியிட மாறுதல் செய்ததால் ஆத்திரமடைந்த வனச்சரக அதிகாரி கணேசன், ஆயுதம், மற்றும் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையைப் பூட்டிவிட்டு, சாவியை எடுத்துச் சென்றுள்ளார்.

இதனிடையே, களியல் வனச்சாரக அலுவலகம் வந்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிக்கு அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், இருக்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், பணிகள் பாதிப்பு அடைந்தன.

Tags

Next Story
why is ai important to the future