கன்னியாகுமரி கோவிலில் வைகாசி விசாக திருவிழா
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருவிழா தொடக்கம்
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்தமாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னி சைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
1-ம் திருவிழாவன்று மாலை நாதஸ்வர கச்சேரியும் இரவு சமய உரையும் அதைத் தொடர்ந்து பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழி நெடு கிலும் பக்தர்கள் வாக னத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், திருவிழா மண்டகப்படி கட்டளைதாரர் பகவதி பெருமாள் பிள்ளை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேல் சாந்திகள் விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, கண்ணன் போற்றி, கோவில் கணக்காளர் கண்ணதாசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர் களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.
அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசை கச்சேரி யும் 9 மணிக்கு அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu