தக்கலை அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்

தக்கலை அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்
X
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கேட்டுப் பெறவும் முன் வர வேண்டும் என கூறினார்

தக்கலை ஊராட்சி ஒன்றியம், மருதூர்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பிலாவிளை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (புதன்கிழமை) சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், கலந்து கொண்டு, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், அரசின் ஆணைக்கிணங்க உள்ளாட்சி தினமான இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொருவரும் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் முழு சுகாதாரத்தை கடைபிடித்திடவும், உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கேட்டுப் பெறவும் முன் வர வேண்டும்.

தற்போது, மழை காலம் ஆரம்பித்து விட்டதால், தங்களது வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்குவதை கண்காணிக்க வேண்டும். நோய்கள் பரப்பும் கொசு உற்பத்தி ஆகுவதை பொது மக்கள் தடுக்க முன்வர வேண்டும். ஏதேனும், நோய் ஏற்பட்டால், அது நேரடியாக உங்களையும், மறைமுகமாக உங்களது பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய வீட்டுவரி, சொத்துவரி ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும், தங்களது கைப்பேசி எண்கள் சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்திட வேண்டும்.

தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும் என்றார்.

தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது வரை "நம்ம ஊரு சூப்பரு" இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மை காவலர்களுக்கும், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கி னார்.

கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி)ரஜத் பீட்டன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, துணை இயக்குநர்கள் ஷீலா ஜான் (தோட்டகலைத்துறை), வாணி (வேளாண்மை), ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, தக்கலை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்அருள் அந்தோணி, மருதூர் குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்செல்வராணி, கல்குளம் வட்டாட்சியர் கண்ணன், தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர்அன்பு உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story