/* */

போக்குவரத்து விதி மீறல் - குமரியில் ஒரே நாளில் 1223 வழக்குகள் பதிவு

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரேநாளில் 1223 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

போக்குவரத்து விதி மீறல் - குமரியில் ஒரே நாளில் 1223 வழக்குகள் பதிவு
X

வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை ஆய்வு செய்த போலீசார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்துடன் வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால் சரியான முறையில் வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இல்லாதது, உரிய ஆவணங்கள் இல்லாதது, அதிவேகம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரேநாளில் 1223 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Updated On: 11 Feb 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை