குமரியில் 2 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி, பொதுமக்கள் மகிழ்ச்சி

குமரியில் 2 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி, பொதுமக்கள் மகிழ்ச்சி
X

கன்னியாகுமரியில் இரண்டு நாட்களுக்கு பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்தியதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து நீடித்து வரும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தினம் தினம் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 9 மையங்கள் மூலமாக 2250 டோஸ் கோவி ஷீல்டு தடுப்பூசிகளை ஆன் லைன் முறையிலும் 66 மையங்கள் மூலமாக நேரடி டோக்கன் முறையில் 9700 டோஸ் கோவி ஷீல்டு தடுப்பூசிகளும் செலுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர், இரண்டு நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்