தொடரும் கனமழை: வேரோடு சாய்ந்த மரங்கள் -சாலையில் போராடும் மீட்பு குழுவினர்

தொடரும் கனமழை: வேரோடு சாய்ந்த  மரங்கள்  -சாலையில் போராடும் மீட்பு குழுவினர்
X

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சுமார் பதினோரு மணி நேரத்திற்கு மேலாக செய்து வரும் இந்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது போல் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, சூறைக்காற்று மற்றும் பலத்த மழை காரணமாக இரணியல், பேயன்குழி, ஆசாரிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன, இரணியல் பகுதியில் 300 வருட பிரம்மாண்ட ஆல மரம் வேரோடு சாய்ந்து, தொடர் மழையின் காரணமாக மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!