/* */

போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2184 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக குமரியில் ஒரே நாளில் 2184 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2184 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்துடன் வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால் சரியான முறையில் வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இல்லாதது, உரிய ஆவணங்கள் இல்லாதது, அதிவேகம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரேநாளில் 2184 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த மூன்று மாதங்களில் விதி மீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Updated On: 5 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  2. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  3. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  4. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  7. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  8. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  9. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
  10. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி