போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரே நாளில் 1943 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரே நாளில் 1943 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
X

குமரியில் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போலீசார்.

போக்குவரத்து விதிமீறல் காரணமாக குமரியில் ஒரே நாளில் 1943 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியும், ஹெல்மட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக செல்வதாகவும் தொடர் புகார்கள் வந்தன.

இதன் காரணமாக விபத்துகள் அதிகரிப்பதோடு சரியான முறையில் விதிமுறைகளை கடைப்பிடித்து செல்லும் பொது மக்களுக்கும், வாகன ஒட்டிகளும் அது பாதிப்பை ஏற்படுத்துவதாக கள ஆய்வு தகவல்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து விபத்துகளை தவிர்க்கும் வகையிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் நடைபெற்ற வாகன சோதனையில் போக்குவரத்து விதிமீறல், ஹெல்மெட் அணியாமல் வருதல், உரிய ஆவணங்கள் இன்றி வருதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 1943 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Tags

Next Story
ai marketing future