குமரியை தமிழக அரசு புறக்கணிக்கிறது: மாவட்ட பஞ்சாயத்து தலைவர் குற்றச்சாட்டு

குமரியை தமிழக அரசு புறக்கணிக்கிறது: மாவட்ட பஞ்சாயத்து தலைவர் குற்றச்சாட்டு
X

கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தின் சாதாரண கூட்டம் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

எந்த திட்டங்களையும் கொடுக்காமல் குமரியை தமிழக அரசு புறக்கணிப்பதாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் குற்றம் சாட்டினார்

கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தின் சாதாரண கூட்டம் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் சுற்றுலா தளங்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.படித்தவர்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீட் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

மலைவாழ் மக்கள் மற்றும் நெடுந்தூரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பத்பநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையை மாவட்டத்தின் இரண்டாவது மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனிடையே மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட் தாஸ் தமிழகத்தில் திமுக அரசு அமைந்து 10 மாதங்கள் ஆகியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இது வரை 1 ரூபாய் கூட செலவு செய்யவில்லை. எந்த ஒரு திட்டங்களையும் அறிவிக்க வில்லை, பொதுவாக எப்போதெல்லாம் திமுக அரசு அமைகிறதோ அப்போதெல்லாம் கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது, அது இப்போதும் தொடர்கிறது.

ஆட்சி பொறுப்பேற்று 2 முறை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மாவட்ட வளர்ச்சிக்கான எந்த செயலையும் செய்யவில்லை.மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் நிறைவேற்றும் தீர்மானத்திற்க்கும், மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் தியிடங்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் புறந்தள்ளும் திமுக அரசு ஏற்கனவே இருக்கும் மக்கள் நல திட்டங்களையும் முடக்கி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் அரசின் இதே நிலை தொடர்ந்தால் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக போராடும் சூழ்நிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story