கன்னியாகுமரி அருகே குழந்தைகளைக் கவரும் பேருந்து வடிவில் அமைக்கப்பட்ட பாலர் பள்ளி

கன்னியாகுமரி அருகே குழந்தைகளைக் கவரும் பேருந்து வடிவில் அமைக்கப்பட்ட பாலர் பள்ளி
X
குமரியில் பேருந்து போன்று அமைக்கப்பட்டு உள்ள பாலர் பள்ளி குழந்தைகளை மட்டும் அல்லாது பெற்றோர்களையும் கவர்ந்தது.

கன்னியாகுமரி அருகேபேருந்து போன்று அமைக்கப்பட்டு உள்ள பாலர் பள்ளி குழந்தைகளை மட்டும் அல்லாது பெற்றோர்களையும் கவர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிக்குள்பட்ட திருவட்டாறு அருகே பூவங்காபரம்பு பகுதியில் பழைய கட்டிடத்தில் பாலர் பள்ளி இயங்கி வந்தது. இதனை மாற்றி புதிய பாலர் பள்ளி அமைக்க பத்பநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதியின் மூலம் குழந்தைகளை கவரும் வகையில் பேருந்து வடிவிலான பாலர் பள்ளி வகுப்பறை கட்டப்பட்டது. இதையடுத்து புதிதாக கட்டப்பட்ட பாலர் பள்ளியை அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். இந்த பாலர் பள்ளி வகுப்பறை குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

Tags

Next Story